search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் மாயம்"

    நாட்டறம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் மேல்மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபி (வயது 21). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் இருந்து கிருஷ்ணகிரி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தாயார் சின்ன பாப்பா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறனர்.
    தருமபுரியில் 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் தரணிகுமார் (வயது13). இவர் தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 28-ந்தேதி அன்று தரணிகுமார் விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை. இது குறித்து பள்ளி தாளாளர் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் தரணி குமாரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் இண்டூர் அடுத்துள்ள பரப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜு (75). நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது மகன் ராஜ்குமார் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜுவை தேடி வருகின்றனர். 
    திருவாரூரில் ஆற்றில் மூழ்கி மாயமான பிளஸ்-2 மாணவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகன் சார்லஸ் (வயது 17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சார்லஸ், தனது நண்பர்களுடன் சீனுவாசபுரம் அருகில் உள்ள ஓடம்போக்கியாற்றில் குளித்துள்ளார்.

    அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், சார்லஸ் தண்ணீர் மூழ்கி மாயமானார். இவருடைய உடலை திருவாரூர் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு அதே பகுதியில் மாணவர் சார்லஸ் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருவாரூரில் ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருவாரூர்:

    திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகன் சார்லஸ் (வயது 17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு்ள்ளதால் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று சார்லஸ், தனது நண்பர்களுடன் சீனுவாசபுரம் அருகில் உள்ள ஓடம்போக்கியாற்றில் குளித்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆற்றில் மூழ்கி சார்லஸ் மாயமானார். இதனால் அவரது நண்பர்கள் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் ஆற்றில் குதித்து தேடினர்.

    மேலும், தகவல் அறிந்து திருவாரூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களும் தேடினர். ஆனால் சார்லஸ் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவரை தொடர்ந்து தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மதிப்பெண் குறைந்ததால் மாயமான பிளஸ்-2 மாணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் சியாம்சுந்தர் (வயது18).

    இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் தனது அத்தை கயல்விழி வீட்டுக்கு சென்று வருவதாக சியாம் சுந்தர் கூறி விட்டு சென்றார்.

    பின்னர் தேர்வு முடிவுகளை பார்த்த சியாம்சுந்தர் அதில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனை அடைந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் திடீரென மாயமாகிவிட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சியாம்சுந்தரை காணவில்லை.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

    ×